
நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்
நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்
தமிழ், மலையாள திரைப்பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார்.
#தமிழ், #மலையாளம், #முன்னணி, #நடிகை, #நடிகை, #ரம்யா_நம்பீசன், #ராமன்_தேடிய_சீதை, #ஆட்ட_நாயகன், #இள