Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிராணிகள் & பறவைகள்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் வியக்க‍வைக்கும் குரங்குகள் - வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் - ஓர் உண்மைச் சம்பவம் நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த (more…)

ஜல்லிக்கட்டு : பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று இந்திய பிராணிகள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் கர்ப் கேட்டுக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் இன்று பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : "1960-ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய பிராணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, (more…)

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .

                நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். செய்தி - தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்

செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகள்

Uncategorized
நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும். * நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம். * ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுபால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும். * குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம். * நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்பு

ஆரூடம் கூறிய ஆக்டோபஸ் பால் இறந்தது

உலககோப்பை கால்பந்து போட்டியின் போது முக்கிய ஆட்டங்களில் வெற்றி தோல்வி யாருக்கு என துல்லியமான கணிப்புகளை தெரிவித்த ஆக்டோபஸ் பால் இறந்தது. ஜெர்மனியின் ஒபர்ஹசன் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பால் இறந்தது குறித்து தெரிந்து பலர் அதன் உடலை பார்க்க வந்தனர்.

மனிதனைவிட மிகவும் ஆற்ற‍ல் மிக்க‍ உயிரினங்கள் உண்டு அவை

சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன். உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில். குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.    

உலகிலேயே மிகவும் வயதான பூனை எது தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் சவுத் ஹீல்டு நகரில் உள்ள‍ ஜாய்ஸ் எலியாட் என்பவர் வளர்க்கும் பூனைதான் உலகிலேயே மிகவும் வயதான பூனை என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் இதுதான் மிகவும் வயதான பூனை என்று அறிவித்துள்ள‍னர். இதன் வயது எத்த‍னை ஆண்டுகள் தெரியுமா? இதன் வயது - 28 ஆண்டுகள் --விதை2விருட்சம்

பிராணிகளின் அவலத்தை மேனியில் காட்டும் ரவீனா

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் ‌பிராணிகள் நல அமைப்பான பீட்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றுகிறார். இந்த விளம்ரத்தில் ரவீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி பாம்புத்தோல் போல் பளபளக்கும் ஒரு அழகான ஆடையில் தோன்றுகிறார். அதன் கீழே, அழகான தோல் ஆடைகள் அணிவதன் காரணமாக பிராணிகள் கொல்லப்படுகின்றன. உங்கள் வார்ட்ரோபில் பிராணிகள் இருக்க வேண்டாம், என்ற வார்த்தைகள் இடம்‌பெற்றுள்ளன. இந்த விளம்பரத்தை புகழ்மிகக புகைப்பட நிபுணர் அவினாஷ் கொவாரிகெர் எடுத்துள்ளார். பூட்ஸ்கள், பைகள் மற்றும் இதர தயாரிப்புகளை செய்ய, பாம்புகள், முதலைகள் மற்றும் இதர பிராணிகளிடம் இருந்து தோல் உரிக்கப்படும் முன்பு அவை எப்படியெல்லாம் அவதிப்படுகின்றன என்பதை இந்த பொருட்களை வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பீட்டா விரும்புகிறது. இந்த விளம்பரத்தில் தோன்றுவதன் மூலம் ரவீனா டான்டன், ஜான் ஆபிரகாம், பமேலா ஆன்டர்சன், சர் பால் மிக்கா