Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரான்ஸ்

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

பனிச்சரிவும், அதன் பயங்கரங்களும் – தற்காப்பு முறைகளும்

பனிச்சரிவு பற்றி தெரியும்முன், பனிக்கட்டியை பற்றிதெரிந்து கொ ள்வது அவசியம். பனிக்கட்டி என்ப து சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவ து. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சிய சைவிட, குறையும்போது, பனிக் கட்டி உருவாகின்றது. அதிகளவி லான பனிக்கட்டிகள், ஒன்றுசேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர் ந்திருக்கும்.   இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும்போது மிக வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்க ள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் (more…)

இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .

ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன.     இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை (more…)

மாபெரும் வெற்றி இது! கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை: ருசிகர தகவல்கள்

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:  *தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.  *மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் (more…)

கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் கலாம் பேட்டி

"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத் து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை (more…)

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு வழிமுறைகள்

திரு. சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடாவில் இருந்து ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல் கள் உருகிய விபத் தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணு மின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்ச மூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணி ப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண் டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்த ளங்கள் தூளாயின. அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரி யக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சி

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்த அமெரிக்கா, பிரிட்டன்

"கடந்த 1970களில், பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்கா வும், பிரிட்டனும் ஈடுபட்டன' என, தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக் காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி ப்பாக, கடந்த 1970ம் ஆண்டு களில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதை தடுப்பதற்கு, அமெரிக்கா மேற் கொண்ட முயற்சிகள் குறித்த (more…)

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடி த்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தா ன். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா வி ண்வெளி ஆய்வு மையத் தில் அவரது ஓவியம் அல ங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன் முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படு த்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் (more…)

2012-ல் உலகம் அழிந்து விடும்: நிபுணர்கள் எச்சரிக்கை – வீடியோ

இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதா யம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமை ப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது. உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை (more…)

மரணம் அடைந்த போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் மீண்டேன்”: கன்னியாஸ்திரி தகவல்

மரணம் அடைந்த போப் ஆண்டவர் ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்” என்று பிரான்ஸ் கன்னியாஸ்திரி தெரிவித் துள்ளார்.   கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு சேவை செய்து மரணம் அடைந்தவர்களின் தெய்வீக அருளால் பல அற்புதங்கள் நிகழ் வதாக நம்பப் படுகிறது. அது போன்று அற்புத ங்கள் செய் பவர்களுக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டங்கள் வழங் கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மரணம் அடைந்த போப் ஜான்பால் அற்புதங்கள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அருளால் நோயில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேரிசி மோன் பியேரி (49). இவர் பிரசவ (more…)