Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புதுக்கவிதை

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை 2006 சூலை மாத தமிழ்ப்பணி மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராக• சத்தியமூர்த்தி ஆகிய நான், எழுதி வெளிவந்த, (more…)

ஒரு தலைக் காதல்

கன்னியை நினைத்து கதிரொளியில் குளிர்காயும் குருட்டுக் காதல் நிலவொளியில் நீந்தியே கரை காணா கற்பனை காதல் - தன் பணி செய்யாமல் பனியில் நனைந்து பிணியில் (more…)

வாழ்க்கை

கேள்விக்குறிகளோடு அமைதியின்றி மனிதர்களும் . . . . ஆச்சர்யக்குறிகளோடு ஆனந்தமாய் குழந்தைகளும்.  . . எழுதியவர் - திருவாளர் கோபால் மனோகர்

வாக்குச்சீட்டு

கால மாறுதல் வேகத்துக்கேற்ப கணிணி வடிவில் வந்தேன் - எனினும் போலித்தனத்தைப் புகுத்தி தொடர்ந்து பொல்லா மனிதர்கள் ஜெயிக்கக் காண்கிறோம். மொத்தமாய் கள்ள ஓட்டினைப் போட்டு முகத்தில் கரியைப் பூசுகின்றார்கள்! - இரா. கல்யாண சுந்தரம், மதுரை (உரத்த சிந்தனை மாத இதழுக்காக)

ஹெல்மெட்

ஆமைக்கு ஓடு, நத்தைக்கு கூடு, உங்களுக்கு நான் என் பெயர் ஹெல்மெட் அஜித் ரசிகர் மன்றத் தலைவன் நான் "தல" யைக் காப்பவன் நான் தானே! ப‌றவைகள் தானியத்தைக் கொத்தாமல் காப்பது சோளக் கொல்லை பொம்மையின் தலைல் சட்டி எமன் உங்கள் உயிரைக் கொத்தாமல் காக்க‌ உங்கள் தலையில் நான்! - பள்ளிக்கொண்டா மோகன்குமார் (உரத்த சிந்தனை மாத இதழுக்காக)

கைபேசி ( செல்போன் )

கையில் பிடித்துப் பேசிக்கொண்டே போவதானாலிது கைபேசி பையில் பைசா இருந்தால் மட்டும் பேச உதவும் கைபேசி மொய்யாய் அருகிலிருந்தாலும் பொய் சொல்ல உதவும் கைபேசி மெய்யிலிதுபோ லொருசிறுகருவி இனிமேலெங்கும் பேசாது வாயில் வருவன எல்லாவற்றையும் (more…)

சிந்திக்க வேண்டுகிறேன். . . .

கண்பார்த்து சிரிப்பவன் - காரியவாதி காணாமல் சிரிப்பவன் - கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் - கவிஞன் தெரியுமென்று சிரிப்பவன் - பசபசப்பாளன் தெரியாதென்று சிரிப்பவன் - நடிகன் இடம்பார்த்து சிரிப்பவன் - சந்தர்ப்பவாதி இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் - கோமாளி ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியகாரன் ஓடவிட்டு சிரிப்பவன் - வஞ்சகன் நீதியோடு சிரிப்பவன் - அறிஞ்சன் செயல்கெட்டு சிரிப்பவன் - பச்சோந்தி அருளுக்கு சிரிப்பவன் - ஆண்டி அறியாமல் சிரிப்பவன் - மடையன் மகிமையில் சிரிப்பவன் - மன்னன் மாண்பில் சிரிப்பவன் - பண்பாளன் கொடுக்கும்போது சிரிப்பவன் - சூழ்ச்சிக்காரன் இன்பத்தில் சிரிப்பவன் - ஏமாளி துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன். நன்றி – சஜிதா, (ஓர் இணையத்தில் சஜிதா அவர்கள் எழுதியது )

உன்

உன் கண்கள் என்ன‍ மீனா உன் உதடுகள் என்ன‍ தேனா உன் இதயத்தில் இருப்ப‍து நானா எனை நீ வெறுத்தால் இப்பிறவியே வீனா இதை எழுதியது என் பேனா எழுதியவர்: செந்தில் நாதன் அலைபேசி 9840 439307

ந‌ரகம், சொர்க‍ம், ஆசை, வித்து, திலகம்

ந‌ரகம் எங்கே இருக்கிறது மங்கையை ம‌ணந்து பார் -  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி சொர்க‍ம் எங்கே இருக்கிறது. உனது தள்ளாத வயதிலும் தாயின் மடியே எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி ஆசை கல்லுக்கும் உயிரிருந்தால் மலை உச்சியில் இருக்க‍ ஆசைப்படும் -  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி வித்து நல்ல‍வனாக நீ இருந்தால், செத்த‍ப்பின்னும் வித்தாவாய் நல் முத்துக்கு . . . . -   எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி திலகம் சகதிக்கு திலகமிட்டுப்பார் சக்தியாக உருமாறும் (சகதி என்ற வார்த்தையில் 'க' என்ற எழுத்துக்கு புள்ளி வைத்துப்பார்) எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

பு(திர்)துக் கவிதை

வேரில்லா கொடியின் காம்பில்லா ம‌லரின் இதழை கைபடாது பறித்திடவா எனக் கேட்க‌ க‌னம் இல்லா தலைக்கேட்டு த‌னமில்லா த‌னவானும் இணங்க‌ நீரில்லா குளத்தின் நடுவே அனல்காற்றை முன்னிறுத்தி வாய் இல்லாத ஊமைகள் வாழ்த்த‍ கண் இல்லாத‌ குருடர்கள் பார்க்க‍ செவி கேளா செவிடர்கள் கேட்க‌ அறுபடா நூலெடுத்து முடிகள் மூன்று சூடும் வேளையில் பறித்திடுவாய் என்றே பதிலுரைத்தாள் எழுதியவர் ராசகவி ரா சத்தியமூர்த்தி எங்களின் விதை2விருட்சம் (www.vidhai2virutcham.wordpress.com) இணைய தள வாசக பெருமக்க‍ளே! இக்கவிதையை படித்துப்பார்த்து தகுந்த பொருளுரையை அல்ல‍து விளக்க‍வுரை யை vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலுக்கு தங்களுடைய புகைப்படத் துடன் அனுப்பி வைக் குமாறு கேட்டுக்கொள்கிறோம். சரியான பொருளுரை அல்ல‍து சரி யான சிறந்த விளக்க‍வுரையை தேர்ந்தெடுத்து நமது விதை2விரு ட்சம் (www.vidhai2virutcham.wordpress.co
This is default text for notification bar
This is default text for notification bar