Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புரட்சி

புரட்சி ஞாநி ‘ஓஷோ’-வின் வாழ்க்கை குறிப்பு – வீடியோ

தத்துவஞானியும், புரட்சியாளருமான ஞாநி திரு. ஓஷோ அவர்களது வாழ்க்கை குறிப்பு நீங்கள் அறியும் வண்ண‍ம் எளிமையான முறையில் (more…)

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் புரட்சி!

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தி யாவில் மட்டும் சு மார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இ ணை யமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழி பெயர் ப்புச் செய்யும் கருவியை உருவா க்கி இருந்தது. உதா ரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உட னடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிற மொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனா ல் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் (more…)

டிஜிட்டல் புரட்சி- இந்தியா

சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை, குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற (more…)

கண் பார்வையை தருவதில் அமல்படுத்தப்பட்டு வரும் புரட்சிகரமான ஆராய்ச்சி பலன்களில் அடுத்தது “பயோனிக் ஐ!’

கண் பார்வையை தருவதில் அமல்படுத்தப்பட்டு வரும் புரட்சிகரமான ஆராய்ச்சி பலன்களில் அடுத்தது “பயோனிக் ஐ!’ விழித்திரை பாதிப்பு தொடர்பாக, வளர்ச்சி பெறாத நிலையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு “பயோனிக் ஐ’ முறை பெரிதும் பயன் தருகிறது. அவர்கள் இழந்த பார்வையை மீட்டுத்தருகிறது. உலகில் முதல் செயற்கைக்கண் இது. அமெரிக்க, பிரிட்டன் நிபுணர்கள் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கண், விழித்திரையில் பொருத்தப்படுகிறது. அதில் மிக நுண்ணிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கும் எதையும் அது படம் பிடித்து, பார்வை நரம்புகள் மூலம் , மூளைக்கு அனுப்புகிறது. அதற்கேற்ப மூளை உத்தரவிடுகிறது. சர்வதேச அளவில், முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை, லண்டன் மூர்பீல்டு கண் மருத்துவமனையில், சமீபத்தில் செய்யப் பட்டது. இந்த செயற்கை கண்ணுக்கு “ஆர்கஸ்’ என்று பெயர். இதில் பொருத்தப்படும் கேமரா, எள் அளவுக்கு தான். இர

பெரியார்: காசி யாத்திரை

1904 இல் பெரியார் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கு யாத்திரிகராக காசிவிசுவநாதரை தரிசிக்க சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமனமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார். இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிரிகால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் யாத்திரிகர் அன்னசத்திரத்தில் பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார் இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிரமாணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறிஉள்நுழையமுயன்றார். ஆனால் அவர்மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்ற

பெரியார் இளமையில் . . .

இளமையில் பெரியார் பெரியார் செப்டம்பர் 17, 1879, ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் தந்தை வெங்கட்ட (நாயக்கர்) மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி ஆவார்கள். பின்னாளில் இவர் தந்தை பெரியார் என மரியாதையுடன் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம
This is default text for notification bar
This is default text for notification bar