
நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ
"நான் சுபஸ்ரீ பேசுகிறேன்... உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா?" -வீடியோ
கடந்த வாரத்தில் (12/09/2019) அன்று சூரிய அஸ்தமனத்தை கண்ட என் தாய்க்கு தெரியாது நானும் அன்று அஸ்தமனம் அடைவேன் என்று, அன்று வீசிய காற்றுக்கு தெரியாது அது ஒரு பூவைத் தான் கவிழ்க்க போகிறது என்று. ஆம் நான் சுபஸ்ரீ பேசுகிறேன்…,
குரோம்பேட்டையில் ஒரு குட்டி வீடு. வீட்டின் உள்ளே சென்றால் ஒரு அழகிய தேவதை. அது நான் தான். அந்த வீட்டினுள் சென்றால், குயிலின் சத்தம் கேட்கும். குயிலை தோடாதீர்கள். அது என் குரல் தான். பத்து மயிலிறகுகள் இருக்கும், அது என் விரல் தான்.
அன்புள்ள தாய், கம்பீர தந்தை என்னை வழி அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தெரியாது அன்று மதியமே நான் குழிக்குள் செல்வேன் என்று. பணி முடிந்த கையோடு, வீடு திரும்பினேன். புயல் வேகத்தில் அல்ல, மென் தென்றல் வேகத்தில் தான். திடிரென விழுந்தது, ஒரு பதாகை.