Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பொய்

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு

ஆப்பு - வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானதுதான் புலனம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த‌ வாட்ஸ் அப் என்ற செயலி. இதற்கு முன்பே அறிமுகமான முகநூல் எனும் ஃபேஸ் புக், மற்றும் கீச்சகம் எனும் ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் வரும் தகவல்களை விட இது அதிவிரைவாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் மக்களிடையே சென்றடைவது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை காட்டுகிறது என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும் மறுபக்கம் பொய்யான செய்திகளும் பற்பல வதந்திகளும், கணக்கின்றி சமூக வலைதங்களில் குறிப்பாக இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் அதிகளவில் இணைய உலகில் எந்தவிதமான இடையூறுமின்றி பரவி வருவதன் காரணமாக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவ தோடு, சிலநேரங்களில் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி விடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இதனை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தடு
ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள்

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் குழந்தைகள் ஏன் பொய் ( #Lie) சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் ( #Psychological #Reason )  கள்ள‍மில்லா வெள்ளை உள்ள‍ம் பிள்ளை உள்ளம் என்பார்க‌ள். அப்படிப்பட்ட‍ (more…)

ஒழுக்க நெறிகள்!

நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு எல்லாவற்றையும் விட க் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மை விடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல் லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம். இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவ தில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

எட்டு வித பொய்கள்

பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை (more…)

பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்கணுமா?

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் ஏய்த்து பிழைபவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல் பேசுவார்கள் இறுதியில் காலை வாரிவிடுவார்கள். நம்பிக்கையுடன் சீட்டுக் கட்டி, ஏமாந்தவர்களின் செய்தியை படிக்கிறோம், புன்னகை பூத்த முகத்துடன் அக்கா, அண்ணேன்னு உரிமையோடு பேசுகிறவரிடம் வாங்கிய பொருள் தரமற்றும், உடைசலாகவும் இருப்பதை பார்த்து மனம் புழுங்குகிறோம் இல்லையா? இன்னும் எத்தனையோ விதங்களில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதுபோன்ற போலி மனிதர்களை சந்திக்க நேரலாம். அவர்களை சாதுரியமாக கண்டுபிடித்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதோ சில வழிகள்… பொய் பேசுபவரின் பேச்சில் சில மாற்றங்கள் தென்படும். குறிப்பாக அவர்களின் சத்தத்தில் முன்பைவிட மாறுதல் இருக்கும். அவர்கள் பேசும் விஷயத்தில், பொய் வரும் இடத்தில் அழுத்தம் கூடுதலாக இருக்கும் அல்லது அதை திரும்பத் திரும்ப வலிறுத்தி பேசுவார்கள். வியாபாரிகள