டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல்
ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது.
பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’ போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுயமதிபீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்க