
மூன்று நடிகைகளிடம் மாட்டிக்கொண்ட அந்த நடிகர்
3 ஹீரோயின்களுடன் விஷ்ணு விஷால்
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரம் உட்பட ஜாம்பவான்கள் இருந்தாலும், தனக்கென பாதை வகுத்துக்கொண்டும் தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவருமான விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
சுஜாதா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஏற்கனவே விஷ்ணு விஷால், காடன், இன்று நேற்று நாளை 2 மற்றும் பெயரிடப்படாத 2 படங்கள் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Vishnu_Vishal, #Manjima_Mohan, #Raiza_Wilson, #FIR, #எப்.ஐ.ஆர்., #விஷ்ணு_விஷால், #ரெ