
பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?
பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?
ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான்.
புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது