
திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்
திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர்.
அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா