
கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி
கோடி ரூபாய் சம்பளம் - வாங்க மறுத்த சாய் பல்லவி
பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி, மாரி-2 தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மேலும் அதில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே என்ற பாடலிலுக்கு நடனம் ஆடி தமிழக ரசிகர்களின் மனத்தில் எளிதாக இடம்பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?' என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றா