
பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது
பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை - கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும்
ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம்