பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட