
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் 25 லட்சம் M-95 முகக் கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு