
மகன் தனுஷுக்கு ஜோடியாக இந்த நடிகையா?
மகன் தனுஷுக்கு ஜோடியாக இந்த நடிகையா?
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மெக்ரின் பிர்சாடா. அதன்பின் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்தில் நடித்திருந்தார். தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் மெக்ரின் இணைந்துள்ளார். எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கும் இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தந்தையாக தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தோடு சினேகா ஜோடிசேர்ந்து நடிக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு யார் ஜோடியாக நடிப்பது என்பதை படக்குழு அறிவிக்காத நிலையில் தற்போது மெக்ரின் பிர்சாடா நடிப்பதை அதிகாரப் பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
#Dhanush, #Mehree