
நாப்கின் இனி எதற்கு? பெண்களே வந்துவிட்டது மென்சுரல் கப்
நாப்கின் இனி எதற்கு? பெண்களே வந்துவிட்டது மென்சுரல் கப் (Menstrual Cup)
மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ் (Menstrual Cup) .
குத்துக்கால் இட்டோ, ஒரு காலை தரைய