
முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
வாரிசு அரசியலில் வந்தவர் என்றும் ஏதும் அறியாதவர் என்றும் மேடை பேச்சில் தடுமாறுபவர் என்றும் சுடலை என்றும் அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது என்றும் முதல்வர் ஆவதற்கு இராசியில்லாதவர் என்றும் கலைஞரைப் போல் இவர் இல்லை என்றும் இன்னும் என்னென்னமோ வார்த்தைகளால் திரு. மு க ஸ்டாலின் அவர்களைப் பற்றி அவரது அரசியல் எதிரிகள் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கேலி செய்தும், இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் முக ஸ்டாலினும் மிரள வைக்கும் தகவல்களும் என்ற தலைப்பில் உள்ள இந்த கட்டுரையை படித்தீர்களென்றால் மு க ஸ்டாலின் யாரென்று தெரியும். அவரது சிறப்பு என்ன என்பதும் தெரியும்.
மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் முத