முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது. இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் ராஜா. உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு என அடுத்தடுத்து நெருக்கடிகள் பல ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இன்று ராஜாவின் வீடுகளில்
சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர். காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும் சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. ராஜாவின் வீடுகள் தவிர அவர் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அந்த துறையின் மூத்த அதிகாரி ஆர்.கே. சண்டோலியா, முன்னாள் ச