Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரி விலக்கு

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்

வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள் 2018 – 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள். அதனால், வருமானவரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தி அபராதம் செலுத்துதல் போன்றவற்றை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும். என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற குழப்பத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்தவும் நேரிடும். அப்படியானவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்களுடைய வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள். வருமானவரி தாக்கல் செய்வதற்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் அவசியம் சேகரிக்க வேண்டும்.

இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு

தமிழ் திரையுலகில் தமிழ் பெயர் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பெயர் வைத்து விட்டு வரிவிலக்கு கேட்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட் மாட்டாது என்றும் அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட துறையினரோடு கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு இணங்க அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாக கருத்தில் கொண்டு தமிழ்ப்படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரிவிலக்கைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள். இடையிலே, ஒருசிலர் தங்கள் விருப்பத்திற்கு பெயர்களை வைத்துக்கொண்டு அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும், வரி