Tag: வார
வனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்
நடிகர் ஆகாஷ் வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதா விடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் மேலும் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.
நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி எனும் மகன், ஒரு மகள் உள்ளனர். வனிதா-ஆகாஷ்க்கு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்த ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் பல வந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரி பரந்தாமன் அடங்கிய (more…)