
சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்
சந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம்
இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது.
இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பிட்டர