Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விவசாயிகள்

8 வழிச்சாலை –  தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக‌ அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ள‍து. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன

கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி – மதுரை விவசாயிகள் சோதனையிலும் சாதனை

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ் நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக் கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூ ர், திருபுவனம் மற்றும் சோழவந் தான் என்ற இடங்களில் செய்கி றார்கள். சில நேரங்களில் கிண ற்றுநீர் சற்று குறைந்து விடுவது ம் உண்டு. மதுரை விவ சாயிகள் துணிவே துணை என்ற நம்பிக் கையில் சோதனையிலும் சாத னை படைக்கும் நெல் ரகங்க ளை சாகுபடி செய்கின்றனர். மது ரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகு படி செய்கிறார்கள். இந்த ரகத்திற்கு செழிப்பைக்கொடுக்க வயலுக் கு கணிசமான அளவு மக்கிய (more…)

நவீன தொழில்நுட்பம்: சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையின ரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ. என்.5 என்ற ரகம் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட் டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து (more…)

பயறுவகைப் பயிர்களுக்கு தொழு உரம்

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண் டும். ஒரு ஏக்கருக்கு 4 கி லோ மணிச்சத்து தரக் கூடிய 25 கிலோ சூப்பர் பா ஸ்பேட் உரத்தை 300 கி லோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து (more…)

விவசாயிகள் தற்கொலை: தமிழகத்தில் அதிக எண்ணிக்கை

விவசாயிகளுக்காக மத்திய அரசு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை ரத்து செய்திருந்தது. ஆனா லும், நாடு முழுவதும் 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிர த்து 175 விவசாயிகள் தற் கொலை செய்தனர். தமிழக த்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதேபோல தமிழக த்தில் 2009ம் ஆண் டில் மட்டும், 456 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது, விவசாயிகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய் யப்பட்டது. கடன் தொல்லை காரணமாக (more…)