Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விவேகானந்தர்

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை (more…)

எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ?

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்கு ள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த் தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்து விடும். * மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர் களையும்விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை. * லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். * கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும். * முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்

யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவ வழிபாட்டிலும் தான் கொண்டு போய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர். அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கி விட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன. இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும். முப்பத்து மூன்று கோடிப்புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப் போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான். சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும். நம்

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்

சொன்னது, நம்ப ஆளுதா

விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஆதிசங்கர்ர், வாரியார், போன்ற எண்ணற்ற மனிதகுல மாணிக்கங்கள் உண்டு இப்பூவுலகில். இவர்கள் அனைவரும்  மிகச் சிறந்த‌  ஆன்மீகவாதிகள் சரி, உண்மைதான். ஆனால் . . . . இன்றைய காலத்தில் சில போலிச்சாமியார்கள் இருக்கிறார்களே அவர்கள் . . . . அவர்கள் எல்லாம் ஆன்மீகவியாதிகள்

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர். இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர். `நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்த

உண்மையான மகிழ்ச்சி

பெற்றுக் கொள்பவன் அல்ல. தன்னிடம் உள்ளதை பிறருக்குக் கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன் ஆவான். தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. உங்கள் தவறுகளை பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள். துயரத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மகிழ்ச்சி என்னும் நினைப்பையே விட்டு விடுவது மட்டும் தான். மிகப்பெரிய பலவீனங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடுகின்றன. தன்னையே மறந்து மன ஒருமைப்பாட்டுடன் ஒருவன் வேலை செய்யும்போது, அந்த வேலை அழியாச் சிறப்புடன் விளங்கும். போராட்டமே சொர்க்கத்திற்கு இருக்கும் ஒரே வழி. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்கின்றது என்றால் அது நரகத்தின் வழியாகச் செல்வது தான். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி என்பதை மறக்காதீர்கள். பெற்றுக்

சகிப்புத்தன்மை: விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு. நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர். நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது. மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல். இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar