Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வெப் சீரிஸ்

இரண்டிலும் நான் எப்போதும் பிஸி- உற்சாகத்தில் சனம் ஷெட்டி

இரண்டிலும் நான் எப்போதும் பிஸி- உற்சாகத்தில் சனம் ஷெட்டி

இரண்டிலும் நான் எப்போதும் பிஸி - உற்சாகத்தில் நடிகை சனம் ஷெட்டி இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர், நடிகை சனம் ஷெட்டி.இவர் தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி, ரலீஸிற்கு தயாராகி வரும் டிக்கெட் என்கிற‌ பேண்டஸி படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இது தவிர தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக வெப் சீரியஸ் என கேட்டால், “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது.