
உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
"சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்"
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா? மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே!
மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால்தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெள