அன்புடன் அந்தரங்கம் (14/02/13): “எல்லாமே நாம் பேசுகிற விதத்திலும், இடம் கொடுக்கும் விதத்தி லும் தான் இருக்கிறது”!
அன்புள்ள அம்மாவிற்கு —
நான் 25வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வரு டம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் கடை நடத்துகிறார். கடையில் பெரும்பா லும் நானே இருப்பேன். குழந்தைக ள்மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல்கூட இருப்பார்; குழந் தைகள் இல்லாமல் இருக்க மாட்டார்.
என்மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலு ம், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொதுசேவையில் நாட்டமுடையவர். தன்னோடுசேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டா லும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை...
கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான