Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 2ஜி ஸ்பெக்ட்ரம்

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள் ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறை கேடாகப் பெற்ற டி.பி. ரியா லிட்டி உரி மையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வா ன் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெய ர் Etisalat DB) தனது துணை நிறு வனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலி ம்ஸ் ஆகியவை மூலமாக (more…)

ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா

அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும்.  கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)

ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, டில்லியில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியமான அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் படவுள்ளன. ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் ஒரு நாள் கூட பார்லிமென்டின் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் முடிவடைந்த சூழ்நிலையில், இம்மாநாடு நடப்பதால், அந்த ஊழல் விவகாரம் குறித்தும், தி.மு.க., உடனான கூட்டணி குறித்து (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை கண்காணிக்க, நேற்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது குறித்து அதிமுக, பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும்,  2ஜி வழக்கு விசாரணையில் சி.பி.ஐ., மிக அதீத மெத்தனம் காட்டி வந்ததாகவும் எனவே தான் தற்போது வழக்கு விசாரணை கண்காணிப்பை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கு எனவும் ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த (more…)

22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி

ஸ்பெக்ட்ரம் மோசடி சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தராததால் வருகிற டிசம்பர் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக இன்று சரத் யாதவ் தெரிவித்தார். இது குறித்து சரத் யாதவ் கூறியதாவது:- டிசம்பர் 22-ந்தேதி டெல்லியில் ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக மாபெரும் பேரணி நடத்தப் போகிறோம். இப்பேரணி தேசிய ஜனநாயக கூட்டணியின் பேரணியாக இல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பேரணியாக இருக்கும் எனக் கூறினார். இடதுசாரிகள் பேரணியில் பங்கேற்பார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சரத் யாதவ் பதிலளிக்க மறுத்தார். நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 13-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்தி அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பேசுவோம் என்றும், இடதுசாரிகள் இதில் கலந்து

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் வி. பாட்டீலை ஒருநபர் குழுவாக மத்திய அரசு நியமித்துள்ளது. 2001-09 காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதில் தொலைத்தொடர்புத் துறையால் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை இந்த குழு ஆய்வுசெய்யும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒருநபர் குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏலமுறை குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது, எது சிறந்த நடைமுறை என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம் என கபில் சிபல் பதிலளித்தார். தொலைத்தொடர்புத் துறையின் எந்தவொரு அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க இந்த குழுவுக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு செய்தது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் அமைச்சர் ராஜா எழுதிய கடிதததை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கடித்தத்தின் உள்ள பாங்கு, நாட்டின் உயரிய அதிகாரத்தில் இருக்கும் பிரதமரை அவமதிப்பது போல் இருப்பதாக உச்ச‍நீதிமன்றம் கண்டித்துள்ளது

பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்‌மோகன் சிங்கின் பரிந்துரைகளை முன்னாள் மத்திய அமைச்சார் ஆ. ராஜா  பின்பற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது. அதோடு நில்லாமல் சட்ட அமைச்சகத்தின் தகுந்த‌ ஆலோசனைகளுக்கு ராஜா செவி சாய்க்காமல் செயல்பட்டிருக்கிறார் என்றும் ராஜாவின் இத்தகைய நடவடிக்கைகள் அமைச்சரவையில் கூட்டு பொறுப்பு என்ற கொள்கைக்கே புறம்பானதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த சொலிசிடர் ஜெனரல், பிரதமரின் கருத்துக்களுக்கு அமைச்சர் ராஜா அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காதிருந்த்தே இப்பிரச்சனைக்கு காரணம் என்றார். இதுதொடர்பாக வந்த புதிய செய்தி