புதிதாக திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், ஒரு குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தாலும் தற்போது குழந்தைப் பேறைத் தள்ளிப் போடுவதற்கான கருத்தடை சாதனங்கள் பல வந்துவிட்டன.
காப்பர் டி, மாத்திரைகள், ஆணுறை, பெண் உறை, ஊசி போன்று ஏராளமான சாதனங்கள் கருத்தடைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவரும் அவரது உடல் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்தடை முறையை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
அதே சமயம், கருத்தடை சாதனத்தை நிறுத்தி விட்டு குழந்தைப் பேறுக்கு தயாராகும் தம்பதிகள், தாம் பயன்படுத்தும் கருத்தடை சாதனத்தை கருத்தரிப்பதற்கு எத்தனை மாதங்களுக்கு முன்பாக நிறுத்தி விட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
நீங்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால் நீங்கள் கருவ