Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ayodhya Problem

அயோத்தி: ஜன.28-ல் மறுபரிசீலனை மனுக்கள் மீது விசாரணை

அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது. மேலும்,  அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நாளேடு ஒன்றில் வெளியான  செய்தி //// ப‌டங்கள் தொகுப்பு - விதை2விருட்சம் மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள் அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா? அயோத்தி பிரச்சினை: வ‌ரலாறு அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம் அயோத்தி: நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்க‍ள் கருத்து மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன். FILE 84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமத

சோனியா: பேச்சுவார்த்தை மூலமே அயோத்தி பிரச்சனை‌க்கு தீர்வு

அயோத்தி நிலப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காண்பதை காங்கிரஸ் வரவேற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கட்சியின் மாத இதழான 'காங்கிரஸ் சந்தேஷ்'-ல் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அயோத்தி நில விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு வரும்வரை அமைதியுடன் காத்திருக்க வேண்டும். எனினும், இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண்பதை காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை. 1992 டிசம்பர் 6இல் நடைபெற்ற அந்த சம்பவம் வெட்ககேடான குற்றவியல் நடவடிக்கை. இதில் தொடர்புடையவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அலா

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்: இந்தியா அயோத்தி தீர்ப்பு சரியானது

அயோத்தி நில வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் சிறந்தது, சரியானது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.  காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ள திக்விஜய் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறியது:  இப்போதுள்ள சூழ்நிலையில் அயோத்தி நில வழக்கில் இதைவிட சிறந்த தீர்ப்பைக் கூறி விட முடியாது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் உள்ள உரிமையை தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது. தீர்ப்பு மூலம் வழக்குத் தொடர்ந்த அனைவருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பாபர் மசூதியை இடித்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றார்.  தீர்ப்பால் முஸ்லிம்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுவதை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு,

முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு கூடாது- ஹிந்து மகாசபை அறிவிப்பு: அயோத்தி நில விவகாரம்

அயோத்தி நில விவகாரம் தொடர்பாக ஹிந்து அமைப்புகள் எந்த முஸ்லிம் அமைப்புடனும் பேசக் கூடாது என்று ஹிந்து மகாசபை கூறியுள்ளது.  பிரச்னைக்குரிய இடத்திலிருந்து ஹிந்து அமைப்புகள் வெளியேறி விடக் கூடாது என்றும் அந்த அமைப்பு பிற ஹிந்து அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து அகில இந்திய ஹிந்து மகாசபை பொதுச் செயலாளர் மணீஷ் மகாஜன் லக்னெüவில் வெள்ளிக்கிழமை மேலும் கூறியுள்ளது:  நிர்மோகி அகாரா அமைப்புக்கு அயோத்தி நிலத்தை முழுமையாக வழங்க வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எந்த ஹிந்து அமைப்பும், அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் பேசக் கூடாது.  அதே நேரத்தில் அயோத்தியில் இருந்து எந்த ஹிந்து அமைப்பும் வெளியேறிவிடவும் கூடாது. அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான சட்டப் போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்

மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப்பு, அயோத்தி பிரச்னைக்குப் புதிய சமரசத் தீர்வு?

அயோத்தி பிரச்னைக்கு புதிய சமரசத் தீர்வு காணப்பட்டிருப்பதாக அதில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் தெரிவிக்கின்றனர்.  வக்ஃப் வாரியம் சார்பில் வழக்கு தொடுத்த ஹஷீம் அன்சாரி (90), நிர்மோஹி அகாடாவின் பஞ்ச ராம்தாஸ், ராமஜன்மபூமி அறக்கட்டளையின் ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோர் அயோத்தியில் ஹனுமான் கடி (ஆஞ்சநேயர் ஆலயம்) நிர்வாகி மகந்த் ஞானதாஸ் இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.  சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர்கள் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய தீர்வைத் தாங்கள் கண்டுவிட்டதாகத் தெரிவித்தனர்; ஆனால் அதை விவரிக்க மறுத்துவிட்டனர்.  "இரு மதங்களையும் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் மனதில் கொண்டு இந்தத் தீர்வைக் கண்டிருக்கிறோம்; இது இரு சமூகத்தவர் இடையில் எதிர்காலத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முதல்படியாக இருக்கும். அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின்

அயோத்திப் பிரச்னையில் நடுவராக செயல்பட மாட்டோம் – காங்கிரஸ்

அயோத்தி நிலப் பிரச்னையில் சமரசத்தை வரவேற்பதாகவும், ஆனால் இருதரப்புக்கும் இடையே நடுவராக செயல்பட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி  அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன திவிவேதி இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்."அயோத்தி நிலப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அமைதியான தீர்வுக்கு சமரச முயற்சிகளை வரவேற்கிறோம். எனினும், அதற்கு நாங்கள் நடுவராக இருந்து முயற்சிகளை எடுக்க மாட்டோம்." என்றார் ஜனார்த்தன திவிவேதி.

நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு: அது இராமர் பிறந்த இடமே

அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார். ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு: 1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா? தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது. இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது.

முஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில் கட்டுவதற்காக. ..

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம் அமைப்பு ஒன்று ரூ.15லட்சம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் செயல்படும் `ஹுசேனி டைசர்ஸ்' என்னும் ஷியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் ஷமின் ஷாம்சி இது குறித்து கூறியதாவது:- நீண்ட கால அயோத்தி பிரச்சினைக்கு இப்போதுதான் தீர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட இதுதான் சரியான நேரம்.எனவே அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி வக்புபோர்டிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இது சம்பந்தமாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்திடமும் பேச இருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்காக ரூ.15 லட்சம் நன் கொடை வழங்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். thanks w.dunia

அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

""அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். எந்த வகையிலும் சரணடைந்து விட மாட்டோம்,'' என சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியத்தின் வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி கூறியதாவது: "அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம். "நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்' என, ஐகோர்ட் தெரிவித்த பார்முலாவை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளாது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். நிலம் விஷயத்தில் சரணடைந்து விட மாட்டோம். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக

அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு சுருக்கம்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்க‍ர் நிலம் யாருக்கு சொந்தம்? அயோத்தியில் இராமர் பிறந்தது உண்மைதான். பாபர் மசூதி கமிட்டி, இந்து மகா சபை, இந்து நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவற்றுக்கு சமமாக பிரித்துக்கொடுக்க‍ வேண்டும். விவரம்: அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளதாக வக்கீல்கள் கூறினர். அயோத்தி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் . தீர்ப்பை அடுத்து பா.ஜ., உயர்மட்டக்குழு அவசர கூட்டம் இன்று மாலை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் நடக்கிறது. தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள நிலை குளித்து சன்னி முஸ்லிம் சட