
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள்
இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன.
இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன.
இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.