Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bharathiyar

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் - சுவாரஸ்ய சம்பவம் தமிழர்களின் நெஞ்சத்தில் சுதந்திரத் தீயை, ஏற்றியவர் பாரதியார். அப்ப‍டியிருக்க பாரதியாரின் சமையல் அனுபவமா? என்று வியப்ப‍வர்கள் மேற்கொண்டு படியுங்கள் பாரதியாரும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் சமையல் செய்ய முடிவெடுத்து தனது வீட்டில் உள்ள அடுப்பைப் பற்ற வைக்க முற்ப‌ட்டார்கள். ஆனால் அடுப்பு பற்றி எரியவே இல்லை. எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் தோல்வியே கண்டனர். இதனால் மனம் சோர்ந்து போன பாரதியார்,. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவ சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்த பாரதியார், `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மேலும் அந்தத் தருணத்தில் இருந்து மனைவியைத் திட்டுவதை நிறுத்தியே விட்டாராம். #பாரதி #பாரதியார், #பாரதிதாசன், #சமையல், #அனுபவம், #சுதந்திரத்தீ, #அடுப்பு, #எரி, #பெண்கள், #பெண், #மகாகவி, #மஹ

மகா கவி பாரதியை பற்றி நெல்லைக் கண்ண‍ன் – சொக்கவைக்கும் சொற்பொழிவு – வீடியோ

"காளனே உனை காலால் உதைப்பேன்!" என்று சொல்லி மரணத்தை மரணிக்கச்செய்த அந்த மகாகவி பாரதியாரைப்பற்றி நெல்லைக் கண்ண‍ன் அவர்களின் சொக்கவைக்கும் (more…)

ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார்

ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்கூட, பூச்சாண்டி என்ற இல்லாத ஒன்றை இருப்ப‍தைச் சொல்லி, குழந்தையை பய முறுத்துகிறாள். இதன் அடிப்படையில் என்ன‍வோ, தனது குழந் தை நன்றாக உணவு உண்டு உடல் நலமோடு வாழ வேண்டும் என்று தாய் நினைக்கிறாள். அது சரி, உடல் மட்டும் எந்த வித நோய் நொடியும் இன்றி நன்றாக வளர்ந்தால், போதுமா? குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க‍ வேண்டிய அந்த தாய், சோறு ஊட்டும்போது, அந்த (more…)

மகா கவி பாரதியின், சாகா வரிகள் (என்னைக் கவர்ந்தது)

அச்சம் தவிர் ஆண்மை தவறேல். இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்பு எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிக்கொள் ஒற்றுமை வலிமையாம். ஓய்தல் ஒழி. ஓளடதம் குறை. கற்றது ஒழுகு. காலம் அழியேல். கிளைபல தாங்கேல். கீழோர்க்கு அஞ்சேல். குன்றென நிமர்ந்து நில். கூடித் தொழில் செய். கெடுப்பது சோர்வு கேட்டிலும் துணிந்து நில். கைத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்து நில். கோல்கைக் கொண்டுவாழ் கவ்வியதை விடேல். சரித் (more…)

வளமும் புகழும் – பாரதியார் சிந்தனை

அறிவின் உருவமாய் ஒளிர்கின்ற கண்ணா! என் உயிரை அழியாமல் பாதுகாப்பாய். என்னுள்ளே கருவினைப் போல் வளர்ந்து அருள்செய்பவனே! தாமரையில் வீற்றிருக்கும் திருமகளோடு இருப்பவனே! திருமகளிடம் இணைந்திருப்பது போல என் உயிரோடு இரண்டறக் கலப்பாயாக. என் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! இவ்வுலகம் அழியும் காலத்தில் அசுரர்களின் தலைகள் சிதறும்படியாகச் செய்து எங்களைக் காப்பாற்று. தேவர்கள் வணங்கும் பெருமானே! உன்னைத் துணையாகப் போற்றி வழிபடுகிறேன். கடலில் இருந்து எழுகின்ற சூரியனைப் போல, என் உள்ளக்கடலில் இருந்து நீ எழுந்து வர வேண்டும். கரியவண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் என் உள்ளம் அழியாத பேரின்பத்தினை பெறட்டும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால் எனக்கு கிடைக்கட்டும். உனது பெருமைகளைப் பாடினால் தீமை சிதைந்து பெருநன்மை விளையும். நிலமகளின் தலைவனாகிய கண்ணனே! உன் புகழை என் மனம் என்றும் பாடிக்கொண்டி