
நடிகை சாக் ஷிக்கு வலுக்கும் எதிர்ப்பு ஏன்?
நடிகை சாக்ஷிக்கு வலுக்கும் எதிர்ப்பு ஏன்?
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3ஆம் பாகத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா ஷெரினும் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.
இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டு விட்டு தனியாக சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்த சாக்ஷி ‘நாய்கள் ரோட்ல குரைக்கும். அத பத்தி கவலைப்படுவியா…’ ‘நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன்’ என்றும் தெரிவித்தார்.
இதனை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் சாக்ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாக்ஷியின் இந்த செயலுக்கு எதிராக இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.
#BiggBoss, #BiggBossTamil, #BiggBoss3, #Sakshi_Agarwal, #பிக்பாஸ், #பி