
Honda Activa 2019-ல் அப்படி என்னங்க ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு
ஹோண்டா ஆக்டிவா 2019-ல் அப்படி என்னங்க ஸ்பெஷல் என கேட்பவர்களுக்கு
“Please hold a pin- drop silence” என ஹோண்டா விடமிருந்து வெளி வந்த டீசர்களைப் பார்த்தபோது, அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவோ புதிய BS-6 ஸ்கூட்டராகவோ இருக்கும் என்றே தோன்றியது. அதற்கேற்ப ''இந்தியாவின் இரண்டாவது BS-6 டூ-வீலர் மற்றும் முதல் BS-6 ஸ்கூட்டர்'' என்ற பெருமையுடன், தனது புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது ‘quiet revolution’ கோட்பாடுகளின்படி, ஹோண்டா களமிறக்கி யிருக்கும் முதல் டூ-வீலராக இது அமைந்திருக்கிறது. இதற்காக மட்டுமே 26 காப்புரிமைகளைப் பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 6 வருட வாரன்ட்டியுடன் வெளி வந்திருக்கும் ஆக்டிவா 125, BS-6 அவதாரத்தில் என்ன மாற்றங்களைக் கொண்டிருக்கிறது?
டிசைன்:
பார்க்க BS-4 மாடலைப் போலவெ இருந்தாலும், புதிய ஸ்கூட்டரை உற்றுநோக்கு