Wednesday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: BJP

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வருவாய் இழப்பை மதிப்பிடுவதைத் தாண்டி, விசாரணை நடைபெற வேண்டியுள்ளது.  முறையான நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அந்த நீதி அனைவருக்கும் தெரியும்படி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒரே வழி பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தான். இதைத் தான் எதிர்க்கட்சிகளும் கோரி வருகின்றன. உண்மையை வெளிக்கொண்டு வர இதைத் விடுத்து வேறு வழியில்லை. இதற்கு ஒப்புக் கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் ஓயாது.இவ்வாறு ஜெயலலிதா, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அ‌மைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .

முன்னாள் மத்திய அ‌மைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள்  ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.  இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் ராஜா. உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு என அடுத்தடுத்து நெருக்கடிகள் பல ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர். காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும் சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. ராஜாவின் வீடுகள் தவிர அவர் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அந்த துறையின் மூத்த அதிகாரி ஆர்.கே. சண்டோலியா, முன்னாள் ச

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு செய்தது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் அமைச்சர் ராஜா எழுதிய கடிதததை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கடித்தத்தின் உள்ள பாங்கு, நாட்டின் உயரிய அதிகாரத்தில் இருக்கும் பிரதமரை அவமதிப்பது போல் இருப்பதாக உச்ச‍நீதிமன்றம் கண்டித்துள்ளது

பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்‌மோகன் சிங்கின் பரிந்துரைகளை முன்னாள் மத்திய அமைச்சார் ஆ. ராஜா  பின்பற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது. அதோடு நில்லாமல் சட்ட அமைச்சகத்தின் தகுந்த‌ ஆலோசனைகளுக்கு ராஜா செவி சாய்க்காமல் செயல்பட்டிருக்கிறார் என்றும் ராஜாவின் இத்தகைய நடவடிக்கைகள் அமைச்சரவையில் கூட்டு பொறுப்பு என்ற கொள்கைக்கே புறம்பானதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த சொலிசிடர் ஜெனரல், பிரதமரின் கருத்துக்களுக்கு அமைச்சர் ராஜா அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காதிருந்த்தே இப்பிரச்சனைக்கு காரணம் என்றார். இதுதொடர்பாக வந்த புதிய செய்தி

ப‌ணப் பட்டுவாடா மற்றும் வன்முறைகளை தடுக்க தேர்தல் அணையரிடம் தமிழக கட்சியினர் வலியுறுத்தல்

தமிழக சட்டசபை தேர்லில் வன்முறைகள் இல்லாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், பணப் பட்டுவாடா தடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் ஒரு கட்ட தேர்தல் தமிழகத்திற்கு நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டன. வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய தேர்தல் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்டி ரெட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினர். அனைத்து அரசியல் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தேர்தல் அதிகாரியை தனித்தனியாக சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மகேந்திர வர்மன், கல்யாணசுந்தரம் ஆகியோர் சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ., சார்பில் மாநில துணை தலைவர் தமிழிசை சவு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற‌ கூட்டு விசாரணைக் குழுவை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என எதிர்கட்சிகள் பிடிவாதமாக இருக்கும் நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி,  காங்கிரஸ் அரசின் வேண்டுகோளுக் கிணங்கி, எதிர்கட்சி்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொது விவாதம் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க‌ வேண்டும் என கோரியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதால் அதை பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சி்கள் நடத்தி வரும் அமளியால் பாராளுமன்ற‌ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று 13வது நாளாக முடங்கிய நிலையில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் தள கட்சி எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்தித்து, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பின் சீதாராம் யெச்சூரி, நிருபர்களுக்கு பேட்டியில், ஜனாதிபதியிடம் அவரது அரசியல் சாசன சக்திகளை பயன்படுத்தி பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளதாக‌ தெரிவி்த்தார்.

பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, பார்லிமென்ட் தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால், 78 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே, "பார்லிமென்ட் நடக்காத நாட்களுக்கான எங்களின் தினப்படியை ஏற்க போவது இல்லை' என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தாராளமனதுடன் அறிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த பத்து நாட்களாக பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், நேற்று லோக்சபா துவங்கியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் வரும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதில் தன்னால் முடிவு காண முடியவில்லை என்று பிரணாப் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த முட்டுக்கட்டை நிலைக்கு அரசு காரணம் எ

தலைப்புச் செய்திகள்

இன்று - தற்போதைய முக்கிய தலைப்புச் செய்திகள் ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து ஆப்பிள்:பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் முறைகேடு புகாரில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா! வில்லன் நடிகர் மீது புதுமுக நடிகை போலீசில் புகார் பிப்ரவரியில் கூட்டணி அறிவிப்பு: ராமதாஸ் கருணாநிதி ராஜினாமா செய்யட்டும்:ஜெ. 'ஜனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி கூடாது' க‌ல்‌வி க‌ட்டண‌‌ம்: பு‌திய தலைவ‌ர் ‌நியமன‌ம் ரேஷன் பொருள்: கருணாநிதி உத்தரவு குஜராத்தை விட்டு வெளியேறின

எம்.ஜி.ஆர்.,க்கு கோயில்

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள்  தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது.

கர்நாடக மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது. இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. "ஜகத் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, தற்போது வழக்கு தொடர்ந்துள்ள 11 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருகின்றனர். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நாங்கள் வர மாட்டோம் என்பதற்கு ஆதாரமாக இந்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்துள்ள விவரங்கள், பரிசீலனைக்கு உகந்ததாக இல்லை.எனவே, இந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது தான்' என்று நீதிபதி சபாஹித் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது. முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆளும் கட்சியினர் இத்

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன். FILE 84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமத