
ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், ருத்ராட்சம் அணியலாமா?
சிவ பக்தர்களில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.
இன்று பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே