
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம்.
நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம்.
வீடுகளை, தூய்மையாக வைத்த