அன்புடன் அந்தரங்கம் (14/10): "தாம்பத்யம் பண்ணிய சிறப்பான நாட்களை, நினைவு கூர்ந்து, அசை போடு!"
அன்பு சகோதரிக்கு—
நான் 42 வயதான பெண். ஒரு தனியார் அலுவலகத்தில், 15 வருடங்க ளாக பணிபுரிந்து வருகிறேன். என் கணவரும், வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு, ஆண் -பெண் என, இரு குழந்தைகள். நான், என் குடும்பத்துடன் சராசரியா ன சந்தோஷத்துடன், வாழ்ந்து வருகி றேன். எனக்கு, கணவரைவிட, குழந் தைகள் மேல் அதிக அக்கறை யும், பாசமும் உண்டு. அவர், அதிக கோபக் காரர். எனவே, குழந்தைகளும், அவரிடம் ஒட்டுவதில்லை.
இப்படி போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களாக, பூகம்பம் வீசிக்கொ ண்டிருக்கிறது. என் அலுவலகத்திற்கு புதிதாக பணியாற்ற, 39 வயது டையவர், எனக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்தார். என்னை பற்றி, என் பக்கத்து இருக்கை தோழியிடம் விசாரிக்க ஆரம்பித்திருக் கிறார். நான், அதே அலுவலக த்தில் தொடர்ந்து, 15 வருடங்கள் பணி புரிவதால், என்னை பற்றி, அனைத்து சக பணியாளர்களும் அறிவர். நான், எந்த தவறான பே