Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Cheif Minister of Karnataka

கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு: பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு செல்லும்:

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட 11 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்ட வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 11 பேரின் பதவி நீக்கம் செல்லும் என்று 3-வது நீதிபதி சபாஹித் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெஜாரிட்டியை மீண்டும் நிரூபிக்க தயார் என எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. சட்டசபையில் மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி முதல்வர் எடியூரப்பாவுக்கு, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார். "இந்த சவாலை சந்திக்க தயார்' என, முதல்வர் எடியூரப்பாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கர்நாடகா சட்டசபை வரும் 14ம் தேதி (நாளை)  மீண்டும் கூடுகிறது. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் எடியூரப்பாவுக்கு, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.நேற்று முன்தினம் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கர்நாடகா சட்டசபை கூடியது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 11 பேரையும்,