கை தட்டி, வாய் விட்டு சிரிப்பதே! ஒரு சிறந்த சிகிச்சைதான். – மருத்துவர் சொக்கலிங்கம்
‘‘டாக்டர் எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டியில எட்டாவது மாடியி ல என் ரூம். பேராசிரியரா சேர்ந்த நாள்ல இருந்து, ஓய்வுபெற்று கௌரவப் பேராசிரியரா இருக்கிற இன்னைக்கு வரை ஒருமுறை கூட லிப்ட் பயன் படுத்தினதில்லே. நடந்துதான் படியேறுவேன். ஒரு நாள் லிப்ட் ஆபரேட்டர், ‘ஏன் சார் நடக்கிறீங்க... வாங்க லிப்ட்ல போகலாம்’ன்னாரு. ‘எதுக்கு’ன்னு கேட்டேன். ‘சீக்கிரம் மேல போக லாம் சார்’னாரு. ‘நான் இன்னுங் கொஞ்ச காலம் இருந்துட்டுப் போறேனே’ன்னு சொல்லிட்டு நடந்தேன்!’’நடப்பதன் முக்கியத்துவத்தை நயமாகச் சொல்லிவிட்டு குழந்தை யைப் போல சிரிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம். உலகமறிந்த (more…)