Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Clinic

பூனைகளுக்காகவே மருத்துவமனை கட்டி மருத்துவம் பார்க்கும் மருத்துவர் – வீடியோ

பொதுவாக விலங்குகளுக்கென்றே தனி மருத்துவர்களும் மருத் துவ மனைகளும் உண்டு. ஆனால் இங்கே பூனைக ளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கும் மருத்து வர் இருக்கிறார். அதுவும் பல்வேறு அதிநவீன மருத்துவ உபகர ணங்களை வாங்கிப் போட்டு  பூனைகளுக்கென்ற  பல்வேறு சிறப்பு மருத்துவப் பயிற்சி எடுத்துக் கொண்டு பூனைகளுக் காகவே தனியாக சிறப்பு மருத்துவ மனை ஒன்று திறந்து (more…)

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்

பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் இஞ்சி,வெங்காயம், பூண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும். பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது. "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறை

ஆயுள் கூட ஆயிலை குறை

மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழா

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள்.  இந்த உயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  அவைதான் மனிதனை  நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன.  மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன.  இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். மனித எலும்புகள் எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும்.  உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.  மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான்.  ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான்.  இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறி

தேன் சேகரிப்பு முறை – வீடியோவில்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட, சாகா வரம் பெற்றது எது தெரியுமா?  தேன் தான் தேனை பார்த்திருப்பீர்கள், தேனை ருசித்திருப்பீர்கள் ஆனால் அது எப்படி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக‌ தேன் சேகரிப்பு முறை - வீடியோவில்

தேன் மருத்துவம்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க  வேண்டிய தேன் உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்பட

மாம்பழம் – மரு‌த்துவ‌ம்

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் 'சி'-யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலு

ஆட்கொல்லி நோய் : நுரையீரல் நோய்கள்

2020ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர்பறிக்கும் நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது மும்பை நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் பாதிப்பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 கோடி மக்கள் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரங்களில் வாகனப்புகையை சுவாசிக்கும் பெருமபகுதி மக்களுக்கு பல்வேறு விதமான மூச்சுக்குழல் நோய்கள் உருவாகி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்துத் துறை காவலர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீடல் நோய் இருப்பது தற்போது மும்பையில் தெரியவந்துள்ளது. மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் சுமார் 115 போக்குவரத்துக் காவலர்களுக்கு இலவச நுரையீரல் சோதனை நடத்தப்பட்டதில் 45% காவலர்களுக்கு நுரையீரல் பலவ

37 ஆண்டுகளாக மயக்க‍ நிலையிலேயே இருந்து மரணத்தை தழுவிய

37 ஆண்டுகளாக மயக்க‍ நிலையிலேயே இருந்து மரணத்தை தழுவிய பெண் எலைனி எஸ் மோஸிடர். இவள் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி சிகாகோ நகரில் உள்ள‍ மருத்துவ மனையில் வயிற்றுக்கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக சேர்க்க‍ப்பட்ட‍வள். மயக்க‍ நிலையிலேயே 1978 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி வரை கோமா நிலையில் இருந்தார். மறுநாள் 25 ஆம் தேதி அன்று இறந்தார்.

பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது. பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு. தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும். பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. இரும்புச் சத
This is default text for notification bar
This is default text for notification bar