Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Commission

தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் விலக, சந்திரசேகரராவ் அழைப்பு

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி அறிந்ததும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் ஆவேசம் அடைந்தார். அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா தனி மாநிலம் தர வேண்டும் என்பது தான் எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். கிருஷ்ணா கமிட்டி போன்ற அறிக்கையை நான் இதுவரை பார்த்ததில்லை. எதற்கும் பயன்படாத, தெளி வில்லாத அறிக்கை. அதில் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் இல்லை. 6 பரிந்துரைகளை வெளியிட்டு மேலும் குழப்பம் விளைவிக்க முயற்சித்துள்ளார். தனி மாநிலம் கிடைக்கும் என்ற (more…)

ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிட்டார் ப•சிதம்பரம் – வீடியோ

தெலுங்கானா பிரச்சனை- ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்ட்டது அதில் 6 ஆலோசனைகள் உள்ளது. இச்செய்தியை தமிழில் படிக்க (இந்த வார்த்தைகளை கிளிக் செய்க)

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை . . .

ப.சிதம்பரம் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வெளியிட்டார். அனைத்து பிரதிநிதிகளிடமும் அறிக்கை நகல் வழங்கப்பட்டது. அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் சொல்லப் படவில்லை. ஆனால் தெலுங் கானா பிரச்சினைக்கு தீர்வுகாண 6 ஆலோசனைகளை வழங்கி இருந்தது. அதன் விவரம் வருமாறு:- 1. தற்போதுள்ள ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளை உருவாக்கி, அதில் ஒன்றை தெலுங்கானா பகுதிக்கு வழங்கலாம். 2.  தனியாக ஒரு கழகத்தினை அமைத்து, தெலுங்கானா பகுதி வளர்ச்சிக்கு செயல்படுத்தலாம். 3. இரு மாநிலமாக பிரிக்கப்பட்டால், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். 2 மாநிலங்களுக்கும் ஐதராபாத்தே தலைநகரமாக இருக்க வேண்டும். 4. இரு மாநிலமாக பிரித்தால் ராயலசீமா பகுதியையும், தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கலாம். 5. ஐதராபாத்தையும், ராயல தெலுங்கானா மாநிலத

தனி மாநிலம் கிடைக்காவிட்டால் . . . : சந்திரசேகர ராவ் மிரட்டல்

ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தனி மாநிலம் அமைப்பது பற்றிய ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அறிக்கை விவரம் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் தெலுங்கானா கட்சி தலைவர் சந்திரசேகரராவ் நிருபர் களிடம் கூறியதாவது:- தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள். எங்களைப் (more…)

தெலுங்கானா விவகாரத்தில் முடிவு: இன்று ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியீடு

டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டத்  தை புறக்கணிக்கப் போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்து ள்ளன. ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங் கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உரு (more…)

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் தகவல் வெளி யானது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்படு வோரிடம், உண்மைகளை வரவழைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்த விவரங்களில் இந்த தகவல் இடம் (more…)