Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Confirmed

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! சனல் 4 உறுதிப்படுத்துகிறது – வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்ய ப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்ப ட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு (more…)

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச

பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று டில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருடன், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கும்,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும். காலியாகச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு 25 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பா
This is default text for notification bar
This is default text for notification bar