விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜயகுமார் குறித்த ரகசியங்களை புத்தமாக வெளியிடுவேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார்.
வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா