Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Curfew

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ? சமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் ம
ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு ஜூன் மாத ஊரடங்கு முடியும் தருவாயில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்
மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் – கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி

மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் – கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி

மீண்டும் ஊரடங்கு ஜுன் 19 முதல் - கொரோனா கோரத்தாண்டவம் எதிரொலி உலகளவில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. தற்போதுதான் நியூஸிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவை வெற்றி கண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்ங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை அதாவது 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்
ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் மே 11ஆம் தேதிமுதல் சென்னை நகரைத் தவிர டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து Tea குடிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது. அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். #ஊரடங்கு, #தேநீர், #டீ, #தமிழக_அரசு, #கொரோனா, #கோவித்19, #பெட்ரோல், #விதை2விருட்சம், #Curfew, #Tea, #Government_of_Tamil_Nadu, #Corona, #Covid_19, #Petrol, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி, பாதிப்புக்கள் அதிகளவில் உயர்ந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, நேற்று அறிவித்த அறிவிப்பில், வரும் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிடையும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மே 17 வரை அதாவது மேலும் 2 வாரங்கள் வரை நீட்டித்திருப்பதாக அதில் இருந்தது. இந்த மத்திய அரசின் அறிவைப்பையடுத்து, இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சுமார் 3 மணிநேரம் வரை நடைபெற்றது. இந்த‌ கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள
காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்

காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம்

காய்கறி வாங்க சென்றவன், மாப்பிள்ளை ஆன சுவாரஸ்ய சம்பவம் ஒரு திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று பாடியிருப்பார். இதே சம்பவம் தற்போது உண்மையாகவே நடைபெற்றுள்ளது அதாவது இளைஞர் ஒருவர், காய்கறி வாங்க போனேன் மாப்பிள்ளையாகி வந்தேன் என்று சற்று மாற்றி பாடியபடி ஒரு பெண்ணை திருமணம் முடித்து வீட்டிற்கே அழைத்து வந்த ருசீகர சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ..... கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஹூடு என்பவரை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பியுள்ளர் அவரது தாயார். ஹூடு ஏற்கனவே.... ஹூடு ஏற்கனவே சுவேதா என்ற பெண்ணை காதலித்து
ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு உலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, உயிரிழப்புக்களும் ஏற்பட்டு உலகையே கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. குறிப்பாக‌ தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு எதிர்பாராத அளவிற்கு எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக முதல்வர் சில அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மண
கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு - ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேர் பாதிப்படைந்திருப்பதும், இறப்பதுமாக இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்