
கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்
கடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்
நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள்கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால்,
அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை
கடவுள் தண்ணீரைப் போன்றவர்:
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற