
சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்..
வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்