
கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
வலியைத் தாங்கவும், வலிமையை அளிக்கவும் வல்லது, கண்ணீர் (அழுகை )என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான் அதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே படித்துணருங்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும் போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது.
சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது.
தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு.
அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்கள