Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: film Review

“பாலா”வின் “அவன் இவன்” முழு திரைப்படம் – வீடியோ

பாலாவின் அவன் இவன் திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு மகிழுங்கள், மறக்காமல் இந்த திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள். வீட்டுக்குள்ளே இருந்த  திருட்டு வி.சி.டி யில் பார்க்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கி றோம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

திரை விமர்சனம்: “பாலா”வின் அவன் இவன்

இயக்குநர் பாலா தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் முடிக்க கிட்டதட்ட மூன் று ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அப்படி ஆண் டு கணக்கில் பாலா எடு த்த படம் அவரையும், அந்த படத்தையும் பற்றி பல ஆண்டுகள் புகழ்ந்து பேசும் அளவுக்கு இருக் கும். அப்படி பட்ட பாலா ஒரே வருடத்திற்குள் எடு த்து முடித்து வெளியான படம்தான் 'அவன் இவன்'. பாலா இவ்வளவு சீக்கிரமா பட த்தை முடித்துவிட்டாரே! ஆச்சரியப்படும் அத்தனை ரசிகர் களும் இந்த படமும், இது பாலா படமா! என்ற (more…)

திரை விமர்சனம்: தொட்டுப்பார்

முன்பின் தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா என்ன வெல்லாம் விபரீதம் நேரிடும் என்பதை சொல்லும் கதை. மதுபானக் கடையில் பணிபுரியும் நாயகன் வித்யார்த், ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை அதிகாரியான கொச்சின் ஹனீபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இப்படி போகிற பொழப்புல விழுகிறது மண். போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும், தனக்குத் தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார் வித்யார்த். அவனோ மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் வித்யார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. ஹனீபா அவரை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலை

திரை விமர்சனம்: காதல் சொல்ல வந்தேன்

கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே காதலை ஏற்க மறுக்கிறார். அவரை வசியப்படுத்த தற்கொலை நாடகம் ஆடுகிறார் பாலாஜி. காதல் நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்… காதல் கதையை கலகலப்பு விறுப்பு என காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன். புதுமுகம் பாலாஜி, கேரக்டரில் பொருந்துகிறார். மேக்னா சுந்தரை பார்த்த மாத்திரத்திலேயே ஓடோடி போய் பள்ளியில் தனது காதலை ஒதுக்கிய பெண்ணுக்கு போன் போட்டு நீ சம்மதிச்சிருந்தா இப்படி அழகான பெண் கிடைச்சிருக்காது. ஒத்துக் காததுக்கு நன்றி என்று சொல்லும் ஆரம்பமே அமர்க்களம்… மேக்னாவுடன் நட்பாக பழகி மனதில் இடம் பிடிப்பது அழகு… மேக்னாவை காதலிக்கும் சீக்கிய மாணவனுக்கு உதவுவது போல் நடி

பஞ்சமுகி – விமர்சனம்

பஞ்சமுகி கோவிலில் பிறந்து வளரும் அனுஷ்காவுக்கு அம்மன் அருள் கிடைக்கிறது. நடப்பவைகளை முன் கூட்டி சொல்கிறார். அவரை பஞ்சமுகி தெய்வமாகவே கிராமத்தினர் வழிபடுகின்றனர். அவ் ஊருக்கு வரும் இளைஞன் பஞ்சமுகி அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பஞ்சமுகி சிலைக்கு அடியில் புதையல் இருப்பதாக ஊர் தாதாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க அனுஷ்கா தடையாக இருப்பதால் உயிரோடு எரித்து கொல்கிறான். இதை நேரில் பார்க்கும் அனுஷ்கா குழந்தை மனநிலை பாதிக்கிறது. அதை குணப்படுத்த அனுஷ்கா கணவன் பட்டணம் வருகிறான். அங்கு அனுஷ்கா மாதிரியே இன்னொரு பெண்ணை பார்த்து அதிர்கிறான். பட்டணத்து அனுஷ்காவிடம் நடந்த விஷயங்களை சொல்லி கிராமத்துக்கு அழைத்து வருகிறான். வந்த இடத்தில் அனுஷ்கா உடலில் இறந்து போன பஞ்சமுகி பக்தையான அனுஷ்கா ஆவி புகுந்து கொள்கிறது. தன்னை கொன்றவர்களையும் கோவிலுக்குள் புதையல்