Monday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fire

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து ; 4 பேர் எரிந்து சாம்பல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கருகி பலியானார்கள். கீழ வாடியூர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி யாற்றிக் கொண் டிருந் தனர். இன்று காலை 12 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண் டிருந்த வர்கள் ஆலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந் துள்ளனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி (more…)

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் . . .

சென்னை, திருவல்லில்கேணி, திருவல்லில்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மிஷினில் இன்று காலை பணம் எடுப் பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்தது. இது குறித்து திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனடி யாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது நேற்று இரவு கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து இருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கணினிதிரையை உடைத்த போது அது தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர் கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர்.   ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே (more…)

முதல்வர் கருணாநிதி: நான் ஒரு நெருப்பு . . . .

லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் தான் ஒரு நெருப்பு என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம் வாங்கியவன் நான். தி.மு.க., வின் எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை நான் வாங்கினேன். தற்போது